ஜனவரியில் புதிய அரசியல் கூட்டணி - வெளியான தகவல்
எதிர்வரும் ஜனவரி மாதம் புதிய அரசியல் கூட்டணியொன்று உருவாக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் புதிய அரசியல் கூட்டணியொன்று உருவாக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் கூட்டணி பற்றிய விபரங்கள் ஜனவரி மாதம் வெளியிடப்படும் என அநுராதபுரத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் வைத்து அவர் கூறியுள்ளார்.
புதிய அரசியல் கூட்டணியின் கீழ் அரசியல் செயற்பாடுகள் தொடரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளித்து வருகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலும் பல்வேறு பிளவுகள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஓர் பின்னணியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்கு வைத்து புதிய அரசியல் கூட்டணி உருவாக்கப்படும் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.